< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
கரூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

தினத்தந்தி
|
20 Sept 2023 12:04 AM IST

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). இவர் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல், கியாஸ் சிலிண்டர்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு வினியோகம் செய்வதற்காக சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி சுந்தரம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த சுந்தரம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்தார். மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றார்.

மேலும் செய்திகள்