< Back
மாநில செய்திகள்
லாரிகள் மோதல்; கிளீனர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

லாரிகள் மோதல்; கிளீனர் பலி

தினத்தந்தி
|
6 Oct 2023 2:14 AM IST

நெல்லையில் லாரிகள் மோதலில் கிளீனர் பலியானார்.

நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழி சாலையில் நேற்று இரவு மரத்தடி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, திடீரென மரத்தடி ஏற்றிய லாரியின் பின்னால் மோதியது. இதில் பின்னால் வந்த லாரியில் அமர்ந்திருந்த கிளீனர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கிளீனர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்