< Back
மாநில செய்திகள்
மீஞ்சூரில் ரெயில்வே கேட் மீது லாரி மோதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூரில் ரெயில்வே கேட் மீது லாரி மோதல்

தினத்தந்தி
|
5 May 2023 7:30 PM IST

மீஞ்சூரில் ரெயில்வே கேட் மீது லாரி மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை- கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று மதியம் இந்த ரெயில்வே கேட்டை மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதனையடுத்து உடனடியாக ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் சென்னை- கும்மிடிப்பூண்டி இரு மார்க்கங்களிலும் புறநகர் ரெயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. லாரி இடித்ததில் சேதமடைந்த ரெயில்வே கேட் மூடியது. இதனால் மீஞ்சூரில் இருந்து நெய்தவாயல், வாயலூர், திருவெள்ளைவாயல், காட்டூர், தத்தைமஞ்சி, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் அந்த பகுதியில் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து சென்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனிடையே ரயில்வே கேட்டை இடித்து விட்டு சென்ற லாரி மீஞ்சூர் பஜாரில் மீண்டும் ஒரு காரை இடித்ததால் லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மது போதையில் இருந்த லாரி டிரைவரிடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்