< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலி
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலி

தினத்தந்தி
|
20 July 2023 1:59 PM IST

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பலியானார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த மிட்டனமல்லி ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், ராணுவ வீரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது திருநின்றவூர் அருகே கொசவன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் சீனிவாசன், வீட்டில் இருந்து வேலைக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் நடுக்குத்தகை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது இவரது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக ெசன்ற லாரி உரசியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சீனிவாசன் தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் அவர் அணிந்திருந்த ஹெல்ெமட்டுடன் தலையும் நசுங்கி சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்