< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
6 Aug 2023 4:22 PM GMT

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 36).

இவர் வாழியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண் (25) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் இன்று மாலை வாழியூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக காட்டுக்காநல்லூர் நோக்கி சென்றார்.

கண்ணமங்கலம் அருகே அழகுசேனை ஏரிக்கு எதிரே தனியார் மருத்துவமனைக்கு அருகே முன்னே சென்ற லாரியை விஜி முந்த முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விஜி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அருண் படுகாயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் கேட்டவரம்பாளையத்தை சேர்ந்த விநாயகம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்