< Back
மாநில செய்திகள்
ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் பலி
வேலூர்
மாநில செய்திகள்

ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் பலி

தினத்தந்தி
|
24 Jun 2023 10:38 PM IST

குடியாத்தத்தில் ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோஸ்மணி (வயது 54), ஆட்டோ டிரைவர். இவருக்கு மாலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

கோஸ்மணி குடியாத்தம் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இன்று அதிகாலை வீட்டிலிருந்து ஆட்டோவில் குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

குடியாத்தம் -பிச்சனூர் பலமநேர் ரோடு ஆனைகட்டிகணபதிதெரு சந்திப்பு அருகே செல்லும்போது குடியாத்தத்தில் இருந்து பரதராமி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கோஸ்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்