< Back
மாநில செய்திகள்
லாரி மோதி விபத்து, 2 பேர் காயம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

லாரி மோதி விபத்து, 2 பேர் காயம்

தினத்தந்தி
|
31 May 2023 12:15 AM IST

நண்பர் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்

மணல்மேடு:

மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் பிரபாகரன் (வயது 29). அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களுடைய நண்பருக்காக திருமணப் பத்திரிகையை வைப்பதற்காக காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மணல்மேடு நாயுடுதெரு அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மணல் லாரி பைக்கின் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பைக்கை ஓட்டிச் சென்ற பிரபாகரன் என்பவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது, பைக்கில் அமர்ந்துவந்த ராஜேஷ் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி ஓட்டுனரான பெருஞ்சேரியை சேர்ந்த தங்கவேலு மகன் பாபு (32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்