தென்காசி
லாரி-பஸ் நேருக்கு நேர் மோதல்; பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|ஆலங்குளம் அருகே நேற்று லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நேற்று லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினர்.
லாரி-பஸ் மோதல்
நெல்லையில் இருந்து நேற்று அரசு பஸ் ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. மேல பட்டமுடையார்புரத்தை சேர்ந்த சேர்மக்கனி என்பவர் பஸ்சை ஓட்டினார்.
ஆலங்குளத்தை கடந்து ஆண்டிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது பஸ்சும், எதிரே வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
பயணிகள் தப்பினர்
பஸ் எதிரே வருவதை பார்த்ததும் லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்த ரிஷ்யூ திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.