< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டபேரவை செயலக அலுவலகத்திற்கு சுழற்கோப்பை

23 Aug 2024 7:24 PM IST
ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டபேரவை செயலக அலுவலகத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
சென்னை,
2022-ம் ஆண்டிற்கான ஆட்சிமொழித் திட்ட செயலாக்க ஆய்வு, தலைமை செயலக அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தமிழக சட்டப்பேரவை செயலகம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டபேரவை செயலக அலுவலகத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சட்டமன்ற பேரவை செயலக முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.