< Back
மாநில செய்திகள்
டிரைம்ப் உலக சாதனை பெற்ற திருவள்ளூர் உணவுத் திருவிழா
மாநில செய்திகள்

டிரைம்ப் உலக சாதனை பெற்ற திருவள்ளூர் உணவுத் திருவிழா

தினத்தந்தி
|
14 Jun 2022 1:37 PM IST

திருவள்ளூர் உணவுத் திருவிழாவிற்கு வழங்கிய டிரைம்ப் உலக சாதனை சான்றிதழை முதல்-அமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.

சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு உணவகங்களில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் உபயோகித்த சமையல் எண்ணெயை பயோ-டீசலாக மாற்றும் வகையில் ஒரேநாளில் பெறப்பட்டது. மேலும் ஒரு லட்சம் நபர்களுக்கு உபரி உணவு ஒரேநாளில் வழங்கினர்.

இதற்காக 'டிரைம்ப் உலக சாதனை' அளித்த சான்றிதழ்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்