< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
20 Feb 2024 10:53 AM IST

போக்குவரத்துத்துறை இணை ஆணையர் முன்னிலையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சென்னை,

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

.

மேலும் செய்திகள்