< Back
மாநில செய்திகள்
வரும் 19-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு  பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாநில செய்திகள்

வரும் 19-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்

தினத்தந்தி
|
10 Jan 2024 4:43 PM IST

நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார் .

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர் .

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் ,

முதல்-அமைச்சரின் அறிவுரையை பெற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஏற்கனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். வரும் 19-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். என தெரிவித்தார் .

மேலும் செய்திகள்