சென்னை ஆலந்தூரிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி வருகை
|சென்னை, ஆலந்தூரில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் (ஓ.டி.ஏ.) செயல்படுகிறது. இங்கு ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னல் அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை,
சென்னை, ஆலந்தூரில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் (ஓ.டி.ஏ.) செயல்படுகிறது. இங்கு ராணுவத்தில் லெப்டினெண்ட் கர்னல் அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த மையத்திற்கு இந்தியாவின் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் நேற்று வருகை தந்தார். பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஜெனரல் சன்ஜீவ் சவுகான் வரவேற்றார். தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் பரமேஸ்வரன் உடற்பயிற்சி சதுக்கம் மற்றும் ஆச்சார்யா பயிற்சிப் பகுதியையும் முப்படை தளபதி பார்வையிட்டார்.
தொடர்ந்து பயிற்சி நிறுவனத்தில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பயிற்சி மையம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாக, பயிற்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முப்படை தளபதி தனது பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் அதிகாரிகளுக்கான வருகை பதிவேட்டில் கருத்துகளை எழுதினார்.