< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மிஸ் இந்தியா போட்டிக்கு திருச்சி திருநங்கை தேர்வு
|7 Dec 2022 2:18 AM IST
மிஸ் இந்தியா போட்டிக்கு திருச்சி திருநங்கை தேர்வாகியுள்ளார்.
திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் திருநங்கை ரியானா சூரி(வயது 26). இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். கடந்த 2019-ம் அண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடந்த மாடலிங் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து இவர் இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.