< Back
மாநில செய்திகள்
திருச்சி சூர்யா ஒரு ஆளே கிடையாது நான் கழுகு சூர்யா ஒரு காக்கா-  வரிச்சியூர் செல்வம்
மாநில செய்திகள்

"திருச்சி சூர்யா ஒரு ஆளே கிடையாது" நான் கழுகு சூர்யா ஒரு காக்கா- வரிச்சியூர் செல்வம்

தினத்தந்தி
|
15 Feb 2023 11:34 AM IST

தன்னை ரவுடி என கூறும் சூர்யா சிவாவை பேருந்து திருடன் என்று கூறலாமா? என்று பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.


சென்னை

வரிச்சியூர் செல்வத்தை காயத்ரி ரகுராம் சந்தித்தது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவுக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இருவரும் மாறி மாறி செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சியூர் செல்வம், திருந்தி வாழும் தன்னை சீண்ட வேண்டாம் என திருச்சி சிவாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரிச்சியூர் செல்வம் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காயத்ரி ரகுராமுடன் நான் இருக்கும் புகைப்படத்தை திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை, இப்படியெல்லாம் போட்டோவை வெளியிடலாமா எனக் கேட்டேன்.

உடனே திருச்சி சூர்யாவும் என்னிடம் மன்னிப்பு கேட்டு அதை எடுத்துவிட்டார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் வரிச்சியூர் செல்வம் தனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் திருச்சி சூர்யா.


இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வரிச்சியூர் செல்வம் கூறியதாவது;-

"திருச்சி சூர்யா என்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்று நான் பேச்சுவாக்கில் சொன்னேன். திருச்சி சூர்யாவும் தனது பிரஸ் மீட்டில் வரிச்சியூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொன்னாலும் பரவாயில்லை நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன்.

என்னை ரவுடி என திருச்சி சூர்யா சொன்னது தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் போகாத ஜெயில்களே இல்லை, இந்தியாவில் 4 மாநில ஜெயில்களில் இருந்துள்ளேன். கடைசியாக திருச்சி ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது தேங்காய் உடைத்து இனிமேல் ஜெயில் பக்கமே போகமாட்டேன் என சபதம் எடுத்தேன்.

என் மீது தற்போது எந்த வழக்கும் கிடையாது. என்னால் என் குடும்பத்தினர் பாதிக்கக்கூடாது. அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எனது பேரன் பேத்திகளுக்காக வாழ்ந்து வருகிறேன். என்னை ரவுடி என சொல்வதற்கு திருச்சி சூர்யா யார்? ஒரு மனிதனின் தன்மானத்தை நோண்டக்கூடாது. நான் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்துள்ளேன். நான் பாட்டுக்கு ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள். ரவுடி என்பது போலீசாரால் கொடுக்கப்பட்ட பட்டம். இன்னும் 2 ஆண்டுகளில் போலீசாரே அதை எடுத்துவிடுவார்கள்.

எனக்கு சூர்யாவை யார் என்றே தெரியாது. மதுரையில் பெல் ஓட்டலில் சாப்பிடச் சென்றபோது மாஸ்டர் கணேஷ் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் போட்டோ எடுத்தேன். இதனை திருச்சி சூர்யா சமூக வலை தளத்தில் "ரவுடியுடன் உனக்கு என்ன வேலை" என்று கேட்டு பதிவிட்டார். டெய்சி என்ற பெண்ணுடன் திருச்சி சூர்யா சண்டை போட்டுள்ளார். திருச்சி சூர்யா எனக்கு ஒரு ஆளே கிடையாது. சமீபத்தில் ஒரு பஸ்சை திருடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன். நான் உயர பறக்கும் கழுகு. ஆனால் சூர்யா ஒரு காக்கா. நான் கடலில் நீந்துகிறவன், ஆனால் சூர்யா கிணற்றில் நீந்தக்கூடிய ஆள்.

சூர்யா பெண்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக கொண்டவர். தற்போது என்னை வம்பிழுத்து இருக்கிறார். நான் செத்துப்போன ரவுடி. திருந்தி நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அப்பா திமுகவின் பயங்கர விசுவாசி.

1978-இல் அதிமுகவினர் எனது தந்தையை வெட்டினார்கள். செல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு கொடுத்த தங்கத்தை எனது அப்பாவுக்கு கருணாநிதி கொடுத்தார். அப்படிப்பட்ட கட்சியில் நான் சேர்ந்து பேரை கெடுத்துவிடக்கூடாது. இந்த தோரணையில் கட்சியில் போய் சேரவும் முடியாது. இப்படியே போய் கட்சியில் சேர்ந்தால் நல்லா இருக்குமா? வெள்ளை வேட்டி சட்டை போடுவது எனக்குப் பிடிக்காது என கூறினார்.

மேலும் செய்திகள்