< Back
மாநில செய்திகள்
திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து அவதூறு: நா.த.க. நிர்வாகிகள் மேலும் 2 பேர் கைது
மாநில செய்திகள்

திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து அவதூறு: நா.த.க. நிர்வாகிகள் மேலும் 2 பேர் கைது

தினத்தந்தி
|
27 Aug 2024 10:58 PM IST

திருச்சி எஸ்.பி. வருண்குமார் குறித்து சிலர் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் வருண்குமார். இவரது மனைவி வந்திதாபாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர்கள் குறித்தும், இவர்களது குடும்பம் குறித்தும் சிலர் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்பட பலர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சென்னையை சேர்ந்த சண்முகம், மதுரையை சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 39 பேரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்