< Back
மாநில செய்திகள்
திருச்சி-ராமநாதபுரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி-ராமநாதபுரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தம்

தினத்தந்தி
|
11 July 2023 12:49 AM IST

திருச்சி-ராமநாதபுரம் ரெயில் மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது.

மதுரை கோட்டம் மானாமதுரை-ராமேசுவரம் பிரிவுக்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையும், மற்றும் 15-ந்தேதி, 17-ந்தேதி, முதல் 20-ந்தேதி வரையும், 22-ந்தேதி, 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையும், 29-ந்தேதியும் திருச்சி-ராமநாதபுரம்-திருச்சி ரெயில் மானாமதுரை-ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருச்சியில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி-ராமநாதபுரம் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:16849) மானாமதுரையுடன் நிறுத்தப்படுகிறது. அந்த ரெயில் மேற்கண்ட நாட்களில் ராமநாதபுரம் செல்லாது. அதுபோல் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.35 மணிக்கு திருச்சிக்கு புறப்பட வேண்டிய ராமநாதபுரம்-திருச்சி முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:16850) ராமநாதபுரத்துக்கு பதிலாக மானாமதுரையில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

மேலும் செய்திகள்