< Back
மாநில செய்திகள்
திருச்சி-ராமநாதபுரம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

திருச்சி-ராமநாதபுரம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

திருச்சி-ராமநாதபுரம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தினர்.

காரைக்குடி

திருச்சி-ராமநாதபுரம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தினர்.

விபத்துகள்

காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் செயற்குழு கூட்டம் அதன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ராகவன், காசி விஸ்வநாதர், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொருளாளர் சரவணன், இணை செயலாளர்கள் கந்தசாமி, சையது உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

திருச்சி முதல் ராமநாதபுரம் வரை செல்லும் இரு வழிச்சாலை தற்போது பகல், இரவு நேரங்களில் வாகனங்கள் மிக அதிகமாக இரு பக்கத்தில் இருந்தும் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருகிறது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன.

4 வழிச்சாலையாக

எனவே நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையினை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும். காரைக்குடி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும், பாதசாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகின்றன. ஆனால் சாலைகள் குறுகலாகவே இருக்கின்றன. இதனால் போக்குவரத்தில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண காவல்துறை போக்குவரத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். காரைக்குடி நகரின் சாலைகளில் திரியும் நாய்கள், மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அவைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்