< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
தேசிய கபடி போட்டியில் விளையாட திருச்சி வீரர்கள் தேர்வு
|20 Nov 2022 1:35 AM IST
தேசிய கபடி போட்டியில் விளையாட திருச்சி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய சப்-ஜூனியர் கபடி போட்டி ஜார்கண்டில் அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வீரர்கள் தேர்வு அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 167 பேரும், 45 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். அமெச்சூர் கபடி கழக தலைவர் தங்கநீலகண்டன் தலைமையில் தேர்வு குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். இதில் போட்டிகள் நடத்தப்பட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பின்னர் அங்கிருந்து தேசிய போட்டியில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்.