< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் கோவைக்கு மாற்றம்
|30 Sept 2022 2:52 AM IST
திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் திருச்சி, சேலம், கோவை உள்பட 10 மாநகராட்சிகளில் பணியாற்றி வந்த என்ஜினீயர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் மதுரை மாநகராட்சி செயற்பொறியாளராக பணியாற்றிய இளங்கோவன் திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளராகவும், திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த குமரேசன் கோவை மாநகராட்சி செயற்பொறியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தூத்துக்குடி, வேலூர், நெல்லை மாநகராட்சி என்ஜினீயர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.