திருச்சி
திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்
|திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ஜங்ஷனில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண் 06880) தினமும் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் பயணிகளின் வசதிக்காக அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி முதல் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி காலை 9.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு பொன்மலை, திருவெறும்பூர், சோளகம்பட்டி வழியாக காலை 10.56 மணிக்கு தஞ்சைக்கு செல்கிறது. பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குடிகாடு, சாலியமங்கலம் வழியாக திருவாரூருக்கு மதியம் 12.16 மணிக்கு செல்கிறது. பின்னர் நாகப்பட்டினம் வழியாக காரைக்காலுக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடைகிறது. இதே போல் காரைக்காலில் இருந்து தஞ்சை வரை செல்லும் வண்டி எண் 06457 முன்பதிவில்லா ரெயில் காரைக்காலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு தஞ்சைக்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.