< Back
மாநில செய்திகள்
திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் சேவை பகுதியாக ரத்து
மாநில செய்திகள்

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயில் சேவை பகுதியாக ரத்து

தினத்தந்தி
|
1 Oct 2024 8:02 AM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி,

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி- காரைக்கால், காரைக்கால் - தஞ்சை இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 31- ந்தேதி வரை திருவாரூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி திருச்சி- காரைக்கால் ரெயில் (எண்:06880), திருச்சி- காரைக்கால் ரெயில் (எண்:06490), காரைக்கால்-திருச்சி ரெயில் (எண்:06739), காரைக்கால்-தஞ்சை ரெயில் (எண்: 06457) ஆகிய ரெயில்கள் இன்று முதல் அக்டோபர் 31- ந்தேதி வரை திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காரைக்கால்- திருவாரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்படும் நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படவேண்டிய ரெயில்கள் திருவாரூரில் இருந்தும், திருச்சி, தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரெயில்கள் திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்