திருச்சி
திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
|திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
பணம் பறிப்பு
திருச்சி நம்பர் 1 டோல் கேட்டை சேர்ந்த காந்தி ராஜ் (47) என்பவர் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரில் திருவானைக்காவல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கத்தை சோ்ந்த முருகானந்தம் (24) என்பவர் காந்தி ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பறித்தார்.
பின்னர் அவரது ஸ்கூட்டரை பறித்து ஓட்டி சென்றார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். மேலும் அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
நர்சு மாயம்
* ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்பநகரை சேர்ந்தவர் காந்தி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18).இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் வெண்ணிலா வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சை தேடி வருகிறார்.
மூதாட்டி மாயம்
* திருச்சி சுந்தர் நகர் ஆசாத் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த நாராயணன். இவரது மனைவி திலகவதி (65). சம்பவத்தன்று இவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தவறி விழுந்து சாவு
* திருவானைக்காவல் தம்பிரான் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த இவர் மாடிப்படியில் ஏறும் போது கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.