< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
|27 Oct 2022 10:06 AM IST
திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடிக்கு சொத்து சேர்த்தாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் சோதனை நடத்தி வருகின்றனர்.