< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
|9 April 2023 10:30 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி,
உலக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.