பட்டமளிப்பு விழா நடத்த தயார்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு
|பட்டமளிப்பு விழா நடத்த தயார் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. அதில், ''தமிழ்நாட்டில் இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த தயார் என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. உறுதிசெய்யும் தேதிகளில் பட்டமளிப்பு விழா நடத்த தயாராக இருப்பதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு நவம்பர் அல்லது டிசம்பரில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், 2021 மற்றும் 2022ல் பட்டம் முடித்தவர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்டில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.