திருச்சி
கிரிக்கெட் போட்டியில் திருச்சி, ஈரோடு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
|கிரிக்கெட் போட்டியில் திருச்சி, ஈரோடு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் போட்டி திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் லீக் முறையில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, நெல்லை, ஈரோடு, ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டிகள் திருச்சி சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் திருச்சி-ஈரோடு அணிகள் மோதின.இதில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 49.3 ஓவர்களில் 190 ரன்களை எடுத்து, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அடுத்து களம் இறங்கிய ஈரோடு அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஈரோடு அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஏற்கனவே அதிக புள்ளிகள் பெற்று இருந்ததால் திருச்சி அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.