தஞ்சாவூர்
பூண்டி மாதா பேராலயத்தில் திருச்சிலுவை பவனி
|பூண்டி மாதா பேராலயத்தில் திருச்சிலுவை பவனி
தஞ்சை மாவட்டம் பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இங்கு 6-வது வெள்ளிக்கிழமையான நேற்று திருச்சிலுவை பவனி நடைபெற்றது. இயேசுநாதர் சுமந்த சிலுவையின் ஒரு பகுதி அமைந்த திருச்சிலுவை அருளிக்கம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மைக்கேல்பட்டி ஆலய வளாகத்தில் இருந்து திருச்சிலுவை அருளிக்க பவனியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். மைக்கேல் பட்டியில் தொடங்கிய பவனி ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி வழியாக பூண்டி மாதா பேராலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பாடல், திருப்பலி குடந்தை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பூண்டி மாதாபேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நாளை (ஞாயிறுக்கிழமை) குருத்தோலை நடைபெறுகிறது. அப்போது கைகளில் குருத்தோலை ஏந்தி பவனியாக வந்து பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.