< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
|15 April 2023 11:30 PM IST
பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செந்துறை:
நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு, தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ேநற்று முன்தினம் செந்துறை தீயணைப்பு அலுவலக வளாகத்தில், பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல், பேரிடர் இன்னல் தவிர்ப்பு செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட உள்ளது.