< Back
மாநில செய்திகள்
பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர்
மாநில செய்திகள்

பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
18 April 2023 12:12 AM IST

பிறந்தநாளையொட்டி தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிறந்தநாள் விழா

கரூரில் நேற்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மத்திய மாநகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் கரூர் கணேசன், சுப்பிரமணியன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மலர் தூவி மரியாதை

இதேபோல் கரூர் மனோகரா கார்னர் பகுதியில் காமராஜர் சிலை அருகே தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பிலும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்