< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை..!
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை..!

தினத்தந்தி
|
21 March 2023 9:20 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் பட்ஜெட் நகலை வைத்து அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்