சிவகங்கை
மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை
|திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் துரை வைகோ மரியாதை செலுத்த உள்ளார்
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பசும்பொன் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வழிகாட்டுதலில் திருப்பத்தூருக்கு கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ வர உள்ளார். அவருக்கும், கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கும் சிவகங்கை மாவட்ட கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
அதன்படி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்று திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே துரை வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அதன்பின்னர் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவிடத்திற்கு துரை வைகோ தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.