< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி
|30 May 2022 1:55 AM IST
மேஜர் சரவணன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி:
கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் 23-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மாநகராட்சி மேயர் அன்பழகன், போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், என்.சி.சி. மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர்.