< Back
மாநில செய்திகள்
வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
22 Oct 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரியில் வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமை தாங்கி நினைவு ஸ்துபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கள் விவேகானந்தன், சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள் தமிழரசி, கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து 18 போலீசார் துப்பாக்கி ஏந்தி 3 சுற்று வீதம் 54 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர். மேலும் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்