தர்மபுரி
வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிவெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
|வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரியில் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தர்மபுரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாவட்ட நிர்வாகிகள் வாசு நாயுடு, பன்னீர்செல்வம், கார்த்தி, சின்னசாமி, நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் சோனியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.