< Back
மாநில செய்திகள்
கூடலூர் பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்-தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்
நீலகிரி
மாநில செய்திகள்

கூடலூர் பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்-தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
7 July 2023 7:15 PM GMT

கூடலூர்

மாடி தோட்டம் அமைத்து பழங்குடியின விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத் துறையை அணுகலாம் என உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.

50 சதவீத மானியத்தில் மாடித்தோட்டம்

கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தோட்டக்கலை துறையில் விவசாயிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநில தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பழங்குடியின விவசாயிகள் பயன்படும் வகையில் 50 சதவீதம் மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தளைகள் வழங்கப்பட உள்ளது.

ஒரு மாடி தோட்ட தளையில் 6 வகையான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் 6 பைகள், 2 கிலோ அளவிலான 6 தென்னை நார் கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், 100 மில்லி மீட்டர் இயற்கை பூச்சி கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகிய பொருட்கள் வழங்கப்படும்.

ஆவணங்களுடன் அணுகலாம்

விவசாயிகள் பங்குத் தொகையாக ரூ.450 செலுத்தி மாடித்தோட்ட தளைகளை பெற்று கொள்ளலாம். ஒரு நபர் 2 தளைகள் வரை பெற்று கொள்ள முடியும். இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பழங்குடியின விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம். இல்லையெனில் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் கூடலூர்- 04262- 263176, தோட்டக்கலை அலுவலர் கூடலூர்- 80723 90606, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தேவாலா - 63802 87760, செறுமுள்ளி - 9751713610, நெலாக்கோட்டை- 7825973 112, சேரம்பாடி- 93856 61439 ஆகிய எண்களில் பழங்குடியின விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்