< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்ற பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊட்டியில் பரபரப்பு
மாநில செய்திகள்

ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்ற பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊட்டியில் பரபரப்பு

தினத்தந்தி
|
23 Feb 2024 2:54 AM IST

ஊட்டியில் ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்ற பழங்குடியின பெண்ணுக்கு விற்பனையாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினருடன் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி வாங்க சென்றார். அப்போது ரேஷன் கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் உள்பட 2 பேர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அவர்களில் ஒருவர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு, மற்றொருவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, தனக்கு பாலியல் தொல்லை அளித்த விற்பனையாளர் உள்பட 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்