< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து
|14 Feb 2024 12:47 PM IST
பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி, நீதித் துறையில் பல உச்சங்களை எட்ட ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, துரிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் மகள் ஸ்ரீபதி , தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். நீதித் துறையில் அவர் பல உச்சங்களை எட்ட எனது நல்வாழ்த்துகள், என தெரிவித்துள்ளார்.