< Back
தமிழக செய்திகள்

கன்னியாகுமரி
தமிழக செய்திகள்
சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து 2 மின்கம்பங்கள் முறிந்தன

29 July 2023 12:15 AM IST
அருமனையில் சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து 2 மின்கம்பங்கள் முறிந்தன
அருமனை,
அருமனையில் நேற்று மாலையில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அருமனை குஞ்சால்விளையை அடுத்த ஐந்துகோணம் பகுதியில் ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்து முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்கம்பங்கள் விழுந்த போது அந்த பகுதியில் யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக சீரமைப்பு பணிகள் செய்து மின் இணைப்பு வழங்கினர். மேலும் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு முறையாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.