தென்காசி
சாலையை சீரமைக்கக்கோரி மரக்கன்று நடும் போராட்டம்
|கடையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மரக்கன்று நடும் போராட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள சாலையில் ரவணசமுத்திரம் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலையில் மரக்கன்று நடும் போராட்டம் நடந்தது.
தகவல் அறிந்த கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இருப்பதாகவும், விரைவில் புதிய சாலை அமைக்க அவர்கள் உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள், சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யவில்லை என்றால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர், வீராசமுத்திரம் ஜமாத் தலைவர் காஜா மைதீன், உறுப்பினர் நாகூர் மைதீன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் அன்சர், வர்த்தக அணி செயலாளர் சுலைமான். வீராசமுத்திரம் ஊராட்சி துணைத்தலைவர் நாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.