< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
திருமாவளவன் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
|17 Aug 2022 11:51 PM IST
திருமாவளவன் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் திருமாவளவன் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சோளிங்கர் பஸ் நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, சோளிங்கர் போக்குவரத்து பணிமனையில் 60 மரக்கன்றுகளை நட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் ரத்தின நற்குமரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் துரை நன்மாறன், ஒன்றிய செயலாளர் வி.சவுந்தர், ஒன்றிய துணை செயலாளர் கொடைக்கல் விடுதலை, சோளிங்கர் பொறுப்பாளர்கள் பாலு, பிரபு, பிரேம்நாத், சாம்பிரேம் மற்றும் பணிமனை கிளை மேலாளர் ரமேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். நிர்வாகிகள் சரவணன், ரமேஷ் குமார், ஜோசப், ரகு, மருதமலை, தி.மு.க. விநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.