< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
|16 Feb 2023 12:15 AM IST
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கரிகால்பாரிசங்கர், ஸ்ரீதரன், சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.