< Back
தமிழக செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணி

தினத்தந்தி
|
11 Jun 2023 1:52 AM IST

பட்டுக்கோட்டை நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கி ஒட்டுமொத்த துப்புரவு பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) குமார், நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன், ஆரோக்கியசாமி ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் பஸ் நிலையம், உத்தண்டி குளக்கரை, நரியம்பாளையம் ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் 200 பணியாளர்களுடன் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். மேலும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை சுத்தம் செய்தனர். நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 2 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி 1000 பேருக்கு இலவசமாக மஞ்சள் பைகளையும் வழங்கினார். மேலும் திடக்கழிவு மேலாண்மைப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 6 பேருக்கும் குப்பைகளைப் பிரித்து வழங்க ஊக்குவித்த என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்திக்கும் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்