ராமநாதபுரம்
1 லட்சம் பேருக்கு சிகிச்சை
|மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,03,440 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,03,440 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
காப்பீட்டு திட்ட அட்டை
ராமநாதபுரத்தில் மருத்துவ துறையின் மூலம் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சிறப்பாக சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டுவிழா மற்றும் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக சிகிச்சை வழங்கிய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்று வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை வழங்கிய ராமநாத புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் பரணிகுமார் ஆகிய தலைமை டாக்டர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார்.
விழிப்புணர்வு
பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினார். மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 6 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒருங்கிணைந்த பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.175.22 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 440 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். மேலும் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு காப்பீட்டு அட்டை உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.
இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியனா ஏன்ஜெல், இணை இயக்குனர் சிவானந்த வள்ளி, முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.