< Back
மாநில செய்திகள்
ஆடல்-பாடலுடன் மனநோயாளிகளுக்கு தனி சிகிச்சை
மதுரை
மாநில செய்திகள்

ஆடல்-பாடலுடன் மனநோயாளிகளுக்கு தனி சிகிச்சை

தினத்தந்தி
|
18 Sep 2022 7:49 PM GMT

திருப்பரங்குன்றம் அருகே அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பதோடு ஆடல், பாடலுடன் மகிழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பதோடு ஆடல், பாடலுடன் மகிழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

நுரையீரல் மருத்துவமனை

திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆஸ்டின்பட்டியில் அரசு நுரையீரல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 1960-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜரால் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. அம்மை, வாந்தி, வயிற்றுபோக்கு, காசநோய்களுக்கு என்று தனித்தனி மருத்துவமனை இயங்கி வருகிறது. தென் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நோய் துயர் தனிப்பு மையம்

இந்த நிலையில் புதிதாக நோய் துயர்தனிப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் ரோடுகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற மனநோயாளிகளை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிக்கப் படுகிறது. தற்போது அசாம், கேரளா, சென்னை, நாமக்கல், தஞ்சாவூர், திண்டுக்கல், ஏழுமலை பகுதியை சேர்ந்த 33 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் அவர்கள் மன அழுத்ததில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவதற்காக தியானத்திற்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு தியான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது

ஆடல்- பாடல்

மனநோயில் இருந்து ஓரளவிற்கு குணமடைந்தோருக்கு கைவினை பொருட்கள் செய்வதற்கு என்று தனி பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தை குறைப்ப தற்காகவே தனியாக விளையாட்டு அறை ஒதுக்கப்பட்டு கேரம்போர்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட நேரத்தில் விளையாடி வருகின்றனர். இதுதவிர பாடல் ஒளிப்பரப்படுகிறது. பாட்டுக்கு சிகிச்சை பெறுவோர்கள் ஆட்டம் போட்டு உற்சாகத்துடன் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர்.

மேலும் செய்திகள்