காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை
|காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை சத்யா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 37). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, மற்றொரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு பகல் 11 மணியளவில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென பூபாலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பூபாலன் முன் விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காஞ்சீ புரம் தாலுகா போலீசார் பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.