< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல்

தினத்தந்தி
|
6 March 2023 12:15 AM IST

பெரியபட்டினத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்புல்லாணி,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியபட்டினம் அழகுநாச்சியம்மன் கோவில் ஊருணி பகுதியில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிளிலும் சிமெண்ட் சாக்கு பையில் மொத்தம் 6 மூடை மணல் இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் மணலுடன் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெரியபட்டினம் மேற்குத்தெருவை சேர்ந்த சீனி மகன் சுலைமான், சீனி மகன் செய்யது ஆகியோரை தேடிவருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்