போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்- தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
|6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
சென்னை,
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தது. ஏற்கனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று நடைபெற்ற 3-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்கும் போது தடுத்து நிறுத்துவது, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்வது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.