< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்
திருச்சி
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
27 July 2022 1:00 AM IST

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து கழக புறநகர்கிளை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. ஓய்வூதியர்கள் நலச்சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்புக்குழு ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துக்கழகங்களை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பலன்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். எந்த மருத்துவ திட்டமும் இல்லாத போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டுத்திட்டம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற சிறப்பு மருத்துவ திட்டம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்