பெரம்பலூர்
தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதலுக்கான கலந்தாய்வு
|தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையில் 2022-23-ம் ஆண்டிற்கு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்டத்திற்குள் மாறுதல் வேண்டி ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 7 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆணைகளை அவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) அண்ணாதுரை வழங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கிறது.